தேர்தல் நடந்தால் திமுக கூட்டணிக்கே வெற்றி வெளியான கருத்துக்கணிப்பு முடிவு
வெளியான கருத்துக்கணிப்பு! இன்று தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணிக்கே வெற்றி
திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்தியா கூட்டணி 45 சதவிகித ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது என இந்தியா டுடே - சி வோட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது. அதிமுக இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. வித்தியாசம் 12% என்பதால் தொட முடியாத உயரத்தில் திமுக கூட்டணியை மக்கள் உயர்த்திப்பிடிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என INDIA Today, CVoter நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
45 சதவீத வாக்குகளுடன் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், 33 சதவீத வாக்குகளுடன் அதிமுக கூட்டணி ஒரே ஒரு தொகுதியிலும் வெற்றுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
தவெக 15% வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் தெரியவந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியை விட திமுக தலைமையிலான கூட்டணி 12% அதிக வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் இந்தியா டுடே- சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு என்பதால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பதும் தெரியவந்துள்ளது.
2026 தேர்தலிலும் திமுக வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு!
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்!
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
