கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் - இருவர் உயிரிழப்பு nipah in kerala
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், கேரள சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீண்டும் கேரளாவை அச்சுறுத்தும் நிபா.. அடுத்தடுத்த மாதத்தில் இருவர் உயிரிழப்பு.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை!நிபா வைரஸ்
கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் ஒருவர் மர்ம காய்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி இறந்துள்ளார் மேலும் மற்றொரு நோயாளி செப்டம்பர் 11ம் தேதியும் இறந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நான்கு பேர், இறந்தவரிடம் கண்டறியப்பட்ட அறிகுறிகளுடன் சிகிச்சை உள்ளனர். அதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து இறந்த நபர்களின் மாதிரிகள் மற்றும் நிபா வைரஸ் தொற்று போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளவர்களின் மாதிரிகளை இறுதி சோதனை நடத்தி உறுதிப்படுத்தலுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பானது 2018 அன்று பதிவாகியது அபோது நிபா வைரஸால்சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2021 ஆம் ஆண்டில், 12 வயது சிறுவன் ஒருவன் வைரஸால் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசு கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் முகமூடிகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்