Breaking News

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback