Breaking News

6 மாநில இடைதேர்தல் வெற்றி பெற்றவர்கள் யார் யார்? முழு விவரம் Results of Bye Elections to Assembly Constituencies

அட்மின் மீடியா
0

6  மாநில இடைதேர்தல் வெற்றி பெற்றவர்கள் யார் யார் முழு விவரம்

கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

 


உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம். வெற்றி பெற்றுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் நடந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கேரளா, ஜார்கண்ட், திரிபுரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்  அதன்படி செப்டம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்று செப் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கின்றது

திரிபுராவில் இரண்டு தொகுதிகள், மேற்கு வங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என ஆறு மாநிலங்களில் ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று முடிவுகள் வெளியாகி உள்ளன

கேரளா :-

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அண்மையில் மறைந்ததை புதுப்பள்ளி தொகுதி காலியானது. 

கேரளாவில் புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் 53 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவா், இரு முறை கேரள முதல்வராக பதவி வகித்துள்ளாா்.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் (37), பாஜக சார்பில் லிகின்லால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜேக் சி தாமஸ் ஆகியோர் களம் கண்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம்:-

தும்ரி சட்ட மன்றத் தொகுதியில்  ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கேபினட் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ மறைவை அடுத்து தேர்தல் நடக்கின்றது

இதில் இந்தியா கூட்டணி ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் மறைந்த மஹதோவின் மனைவி பீபி தேவி களம் இறங்கியுள்ளார்

பாஜக ஆதரவுடன் அனைத்து மாணவர் சங்கத்தின் சார்பில் யசோதா தேவி களம் கண்டுள்ளனர்.

திரிபுரா:-

திரிபுரா மாநிலத்தில் தன்பூர் சட்டமன்ற தொகுதி மற்றும்  பாக்சாநகர் சட்ட மன்ற தொகுதி ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஆளும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. 

திரிபுரா மாநிலம் பாக்ஸா நகர் தொகுதியில் சிபிஐ(எம்) எம்எல்ஏ சம்சுல் ஹக் மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் சிபிஎம் மிஸான் உசேனும், பாஜக சார்பில் தஃபஜ்ஜால் ஹூசைன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

தன்பூர் தொகுதியில் எம்எல்ஏ பதவியில் இருந்து மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக் ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக சார்பில் பிந்து தேப்நாத், சிபிஎம் சார்பில் கவுசிக் தேப்நாத் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர்.

உத்திர பிரதேசம் :

உத்தரப்பிரதேசத்தின் கோஷி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சமாஜ்வாடி கட்சியின் தாரா சிங் சவுஹான் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். 

இந்தியா கூட்டணி ஆதரவுடன் சமாஜ்வாடி கட்சி சார்பாக சுதாகர் சிங் போட்டியிடுகிறார். 

பாஜக சார்பில் ராஜினாமா செய்து இருந்த முன்னாள் சமாஜ்வாடி எம்எல்ஏ தாராசிங் சௌஹான் களம் கண்டுள்ளார்.

மேற்குவங்கம்:-

மேற்குவங்கத்தின் துப்குரி சட்டமன்ற தொகுதியை கடந்த 2021 தேர்தலில் பாஜக கைப்பற்றியது. அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிஷு படா ரே மறைவை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 

இத்தொகுதியில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் - இடதுசாரிக் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

பாஜக சார்பில் தாபாசி ராய் என்பவரைக் களம் இறக்கியுள்ளது. 

இங்கு திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி சார்பில் சிபிஎம் கட்சியை சேர்ந்த ஈஸ்வர் சந்திர ராய் களம் கண்டுள்ளார். 

உத்தரகண்ட் :-

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் சட்ட மன்ற தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ சந்தன் ராம் தாஸ் மறைவால் அங்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது

இங்கு பாஜக சார்பில் தாஸின் மனைவி பார்வதி களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பசந்த் குமார், சமாஜ்வாதி கட்சி சார்பில் பகவதி பிரசாத்  களம் கண்டுள்ளனர்.

6 மாநிலங்களில் நடக்கும் 7 சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் உத்திர பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 

ஜார்கண்ட் மாநிலம்:- இந்தியா கூட்டணி வெற்றி

தும்ரி சட்ட மன்றத் தொகுதியில்  ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கேபினட் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ மறைவை அடுத்து தேர்தல் நடக்கின்றது

இந்தியா கூட்டணி சார்பில் ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சி வேட்பாளர் Bebi Devi 100317  வாக்குகள் பெற்றி வெற்றி பெற்றுள்ளார்

இவரை எதிர்த்து போட்டியிட்ட யசோதா தேவி  83164  வாக்குகள் பெற்று தோல்வி

ஒவைசி கட்சி வேட்பாளர் Abdul Mobin Rizvi  3472 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்

நோட்டா 3650 வாக்குகள்பெற்றுள்ளது

கேரளா மாநிலம்:- இந்தியா கூட்டணி வெற்றி

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாண்டி உம்மன்  80,144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

ஜெய்க் சி தாமஸ் (சிபிஐஎம்) 42,425 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்

லிஜின் லால் (பாஜக) - 6,558 வாக்குகள் ம்ட்டுமே பெற்றார்

மேற்கு வங்க மாநிலம்:- இந்தியா கூட்டணி வெற்றி

மேற்குவங்கத்தின் துப்குரி சட்டமன்ற தொகுதியை கடந்த 2021 தேர்தலில் பாஜக கைப்பற்றியது. அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிஷு படா ரே மறைவை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. 

இந்தியா கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸ், சார்பில் போட்டியிட்ட நிர்மல் ஈஸ்வர் சந்திர ராய் 97613 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர்  தாபாசி ராய் 93304 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்

உத்திர பிரதேசம்  மாநிலம்: இந்தியா கூட்டணி வெற்றி

உத்தரப்பிரதேசத்தின் கோஷி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சமாஜ்வாடி கட்சியின் தாரா சிங் சவுஹான் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். 

இந்தியா கூட்டணி ஆதரவுடன் சமாஜ்வாடி கட்சி சார்பாக சுதாகர் சிங் போட்டியிடுகிறார். 

பாஜக சார்பில் ராஜினாமா செய்து இருந்த முன்னாள் சமாஜ்வாடி எம்எல்ஏ தாராசிங் சௌஹான் களம் கண்டுள்ளார்.

இந்தியா கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக சுதாகர் சிங் 124427 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர்  தாராசிங் சௌஹான் 81668 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்

திரிபுரா மாநிலம்:- பாஜக வெற்றி

போக்சாநகர்,தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட Tafajjal Hossain 34146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐஎம் கட்சி வேட்பாளர்  Mizan Hossain 3909 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்

தன்புர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட Bindu Debnath 30017 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐஎம் கட்சி வேட்பாளர்  Kaushik Chanda 11146 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்

உத்தரகாண்ட் மாநிலம்:- பாஜக வெற்றி

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் சட்ட மன்ற தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ சந்தன் ராம் தாஸ் மறைவால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது

இங்கு பாஜக சார்பில் தாஸின் மனைவி பார்வதி களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பசந்த் குமார்,போட்டியிட்டர்

பகேஷ்வர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட Parwati Dass 33247 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  Basant Kumar 30842 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்

6 மாநிலங்களில் நடைபெற்ற ஏழு தொகுதி இடைதேர்தலில் 4 தொகுதிகளில் "இந்தியா" கூட்டணி வெற்றிப்பெற்றுள்ளது 3 தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது

மேலும் விவரங்களுக்கு:-

https://results.eci.gov.in/ResultAcByeSeptNew2023/index.htm

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback