Breaking News

வேலூர் மாவட்டத்தில் 5 ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இன்று (செப்.21) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு



தமிழகத்தில் மேற்கு திசை மாறுபாட்டின் காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆட்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. 

இந்த மழை காரணமாக வேலூரில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback