விக்ரம் லேண்டரிலிருந்து பிரஜ்ஞான் ரோவர் தரையிறங்கும் வீடியோ வெளியீடு வீடியோ பார்க்க Rover ramped down
கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக ஆகஸ்ட் 23 அன்று தரையிறங்கியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது
இந்நிலையில் தற்போது நிலவில் லேண்டரிலிருந்து ரோவர் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!
நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது
சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும்.இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/chandrayaan_3/status/1694948081052303375
Tags: இந்திய செய்திகள்