சமூக ஊடகங்களில் அதிக பாலோவர்ஸ் இருந்தால் மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம் ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு Rajasthan Government To Hire social media influencers can earn up to 5 Lakh per month
ராஜஸ்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான விளம்பரங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், ராஜஸ்தான் அரசு ஒரு அதிரடி திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது
அதன்படி, யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், 10 ஆயிரம் ஃபாலோயர்களுக்கு மேல் இருக்கும் இளைஞர்களுக்கு, அரசின் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது.
இதற்காக, லட்சக்கணக்கில் ஃபாலோயர்களைக் கொண்ட சமூக ஊடகவியலாளர்களை நேரில் அழைத்து, தங்களது பக்கங்களில், அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது
இது குறித்து ராஜஸ்தான் அரசு கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில்:-
பாலோயர்களை அடிப்படையாக வத்து சமூக ஊடகவியலாளர்கள் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும் என்றும் அதில் 10 ஆயிரத்துக்கும் மேல் ஃபாலோயர்களைக் கொண்ட அனைவருக்கும் ராஜஸ்தான் அரசின் விளம்பரங்கள் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.அதன்படி, 10 லட்சத்துக்கும் மேல் ஃபாலோயர்களைக் கொண்டவர்கள் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் இடுகையிடும் அதிர்வெண் ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வகையான சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
ஏ பிரிவு:-
10 லட்சம் பேர் பாலோவர்கள் உள்ளவர்கள்
மாதத்திற்கு 150 பதிவுகள் அல்லது 100 வீடியோக்கள் பதிவிடவேண்டும் இவர்களுக்கு மாதத்திற்கு ₹ 5 லட்சம் வரை வழங்கப்படும் ,
பி பிரிவு:-
5 லட்சம் பாலோவர்கள் உள்ளவர்கள் இவர்களுக்கு மாதத்திற்கு 60 வீடியோக்கள் பதிவிடவேண்டும் இவர்களுக்கு மாதத்திற்கு ₹ 5 லட்சம் வரை வழங்கப்படும் ,
சி பிரிவு:-
1 லட்சம் பாலோவர்கள் உள்ளவர்கள்
D பிரிவு:-
10,000 பாலோவர்கள் உள்ளவர்கள்
C மற்றும் D பிரிவுகளில் உள்ள பயனர்கள் ₹ 2 லட்சம், ₹ 50,000 மற்றும் ₹ 10,000 வரை சம்பாதிக்கலாம் என கூறப்படுகின்றது
குறிப்பாக, அந்த விளம்பர விடியோ மக்களை சென்றடையும் விகிதத்தை அடிப்படையாக வைத்தே பணம் வழங்கப்படும் என்றும், அதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்கியுள்ளது ராஜஸ்தான் அரசு.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்