Breaking News

ஓட்டுநர், கொத்தனார், பிளம்பர், தச்சுவேலை, சமையல், வேலைக்கு ஆட்கள் வேண்டுமா? UWSA என்ற ஆப் அறிமுகம் செய்த தமிழக அரசு

அட்மின் மீடியா
0

ஓட்டுநர், கொத்தனார், பிளம்பர், தச்சுவேலை, சமையல், வேலைக்கு ஆட்கள் வேண்டுமா? UWSA என்ற ஆப் அறிமுகம் செய்த தமிழக அரசு


தமிழ்நாட்டில் பிளம்பர், கொத்தனார், தச்சுவேலை, சமையல், ஓட்டுநர் போன்ற வேலை பார்க்ககூடியவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக புதிதாக uwsa என்ற ஆப்பை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. 

சோதனை அடிப்படையில் 3 மாவட்டங்களில் சேவையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் சேவை செயலி (Unorganised Workers Service App) மூலம் ஓட்டுநர்கள், கொத்தனார், தச்சுவேலை, சமையல் போன்றவற்றின் சேவைகளை பெறலாம்

தமிழ்நாட்டில் பிளம்பர், கொத்தனார், தச்சுவேலை, சமையல், ஓட்டுநர், விவசாய கூலி வேலைக்கு செல்வோர், போன்றவர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கிறார்கள். இவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்கள் வாயிலாக ஓய்வூதியம், உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இவர்களுக்கு வேலை அளிக்க அரசு இந்த ஆப்பை கொண்டு வந்துள்ளது.

தற்போது 3 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இச்செயலி மூலம் சேவையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஓட்டுனர்கள், தச்சு, கார்பெண்டர், பிளம்பர் போன்றவற்றின் சேவைகளை பொதுமக்களும் பெறலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback