Breaking News

TNUSRB SUB INSPECTOR பணிக்கு விண்னப்பித்தவர்களுக்கு தமிழக அரசின் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (TNUSRB SUB- INSPECTOR - 2023) பட்டதாரி கல்வித்தகுதியில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) உள்ளிட்ட 621 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 05.05.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 

கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு வயது வரம்பு 01.07.2023 அன்று O/C - 20-30, BC, MBC, BCM-20-32, SC/ST/SCA -20-35 க்குள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி https://www.tnusrb.tn.gov.in ஆகும்.

இதற்கான இலவச பயிற்சி வகுப்பு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், 29.05.2023 அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது, 

இப்பயிற்சி வகுப்பிற்கு சேர. விருப்பமும் (ம) தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள்தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம். 

இப்பணிகாலியிட தேர்வு தொடர்பான விவரங்களுக்கு. https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இவ்வலுவலக தொலைபேசி எண்கள் வழியே 7811863916(ம) 9499966026 தொடர்பு கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைஆணையர் திரு. கொ. வீர ராகவ ராவ் இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback