Breaking News

தொலைந்து போன மொபைலை IMEI நம்பர் வைத்து ஈசியாக கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !! How to find Lost or Stolen Mobile Phones using IMEI

அட்மின் மீடியா
0

உங்கள் மொபைல் திருடு போனாலோ அல்லது  காணாமல் போனாலோ உங்கல் சிம் கார்டை  பிளாக் செய்யாமல் மொபைலை பிளாக் செய்யலாம்.இதனை பயன்படுத்தி காணாமல் போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம். அது எப்படி என இந்த பதிவில் முழுமையாக காண்போம் 


மொபைல் போன் தொலைத்து விட்டால் அல்லது அது திருடு போனால் அதனை கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டமாகும் அந்த போன் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. ஆனால், இனி நம்முடைய போன் தொலைந்துவிட்டால் அதனை கண்டுபிடிக்க மத்திய அரசு சஞ்சார் சாத்தி Sanchar Sathi என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியா முழுவதும் தங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களின் 15 இலக்க ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு அந்த போன் எங்கு இருக்கிறது என எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மேலும் சிறப்பம்சமாக அந்த மொபைல் போனை யாரும் பயன்படுத்த முடியாதவாறு முடக்கவும் முடியும். 

IMEI எண் என்றால் என்ன:- 

International Mobile Equipment Identity என்பதன் சுருக்கம் தான் IMEI ஆகும் ஒவ்வொரு மொபைல் போனும் சர்வதேச மொபைல் கருவி அடையாள எண் (IMEI) எனப்படும் 15 இலக்க தனிப்பட்ட எண்ணுடன் வருகிறது. இந்த தனிப்பட்ட எண் ஒவ்வொரு மொபைல் சாதனத்திற்கும் அடையாளச் சான்றிதழாகும், அதை யாரலும் மாற்ற முடியாது. அது தற்போது எந்த நெட்வொர்க்கில் இணைந்துள்ளது என்பதை கண்டறியவும் உதவும் எண்ணாகும். அந்த செல்போனில் புதிய சிம் கார்டு மாற்றப்பட்டாலும், மொபைல் இருக்கும் இடத்தை எளிதாக ட்ராக் செய்துவிட முடியும். உங்கள் மொபைலைக் கண்காணிக்க இந்த எண்ணைப் பயன்படுத்த முடியும் IMEI எண்ணைப் பயன்படுத்தி உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைலை எப்படிக் கண்காணிக்கலாம் மற்றும் தடுக்கலாம் 

மொபைலை பிளாக் செய்வது எப்படி:-

https://www.ceir.gov.in/Home/index.jsp  மத்திய அரசின் அதிகாரபூர்வ வெப்சைட்டுக்கு சென்று திருடு போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம். 

அந்த வெப்சைட்டிற்கு சென்று BLOCK STOLEN/ LOST MOBILE  என்பதை கிளிக் செய்யுங்கள் அடுத்து அதில் உங்கள் பெயர் , உங்கள் புதிய மொபைல் நம்பர், பழைய மொபைல் ஐ எம் இ ஐ நம்பர் , உங்கள் மொபைல் கம்பெனி பெயர், மாடல், உங்கள் மொபைல் வாங்கிய பில் ஆகியவற்றை சரியாக பதிவிடுங்கள்

அடுத்து உங்கள் மொபைல் எங்கு தொலைந்தது நாள் , இடம் , நேரம் , காவல்துறை புகார் எண்  போன்ற விவரங்கள்பதிவிடுங்கள் 

அடுத்து உங்களை பற்றிய விவரம் , உங்கள் ஜடி ப்ரூப், முகவரி என அனைத்தையும் பதிவிடுங்கள் அடுத்து சப்மிட் கொடுத்து 

உங்கள் தொலந்த அல்லது திருடு போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம். அதன்பின்பு உங்களுக்கு ஒரு Request ID கொடுக்கப்படும் அதனை வைத்து நீங்கள் உங்கள் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம் 

உங்கள் மொபைல் ஐ எம் இ ஐ நம்பர் தெரிந்து கொள்வது எப்படி:- 

நமது மொபைல் எண்ணின் ஐ எம் இ ஐ நம்பரை தெரிந்து கொள்ள *#06 # என்ற டைப்செய்து தெரிந்து கொள்ளலாம் 

திருடு போன மொபைல் கிடைத்த பின்னர் அன்லாக் செய்ய:-

https://www.ceir.gov.in/Home/index.jsp மீண்டும் மேல் உள்ள வெப்சைட்டை பயன்படுத்தி அன்பிளாக் செய்து கொள்ளலாம்.

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback