Breaking News

தமிழக அமைச்சரவை மாற்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது



அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். 

இதனிடையே செந்தில் பாலாஜியை 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த நிலையில், செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆய தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback