இரத்ததானம் செய்ய மருத்துவமனையில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வைரல் வீடியோ
ஒடிசா ரயில்கள் விபத்து; காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் ரத்ததானம் வழங்க குவிந்த உள்ளூர் மக்கள்
கொல்கத்தாவில் நேற்று மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எண் - 12842 ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹானாகா ரயில் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் சுமார் இரவு 7 மணியளவில் ரயில் வந்து கொண்டிருந்த போது,கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு, சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிவிபத்துக்குள்ளானது
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள 6 பெட்டிகள் நசுங்கி ஒன்றின் மீது ஒன்று மோதியுள்ளது
வனப்பகுதியில் விபத்து நடந்ததால் உடனடியாக யாருக்கும் தெரியவரவில்லை. ரயில் குறிப்பிட்ட நேரத்தில் ஸ்டேஷனுக்கு வராதது குறித்து விசாரணையில் விபத்து குறித்து தெரியவந்திருக்கிறது
உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்துக்கு தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை சுமார் 132 பேர் காயமடைந்திருப்பதாக ஒடிசாவின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.மேலும் முதற்கட்ட தகவலில், சுமார் 50 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் அவர், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்தேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.மேலும், ரயில்வே அமைச்சரிடம் பேசி நிலைமையை கேட்டறிந்ததாகவும். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. என்றும் அவர் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 கருணை இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்று உறுதியளித்துள்ளார். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த முதல்வர், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கைத் தொடர்புகொண்டு விபத்து குறித்து கேட்டறிந்துள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.மேலும், உடனடியாக அவசர உதவி அழைப்பு எண்ணை உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, 044-28593990, 9445869843 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் விபத்து குறித்து கேள்விபட்ட உள்ளூர் மக்கள், மற்றும் அக்கம் இருந்த கிராம மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் குவிந்து வருகின்றார்கள்
நமக்கு கிடைத்த தகவல்படி சுமார் 20,000 பேர் வரை ஒடிசா ரயில்கள் விபத்து காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் ரத்ததானம் வழங்க குவிந்துள்ளார்கள் நள்ளிரவிலும் அவர்களின் மனிதநேயம் தொடர்ந்தது
வீடியோக்கள் பார்க்க:-
https://twitter.com/vipinsuryaIND/status/1664732210484609024
https://twitter.com/RajatTripathy04/status/1664705334668333056
Tags: இந்திய செய்திகள்