அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வீடியோ
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் சகோதரர் அசோக்குமாா் வீட்டிலும் மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை 8 மணி முதல் சோதனை செய்துவந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக நள்ளிரவு 2 மணி அளவில் அழைத்துச்செல்லப்பட்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதன் காரணமாக அவர் சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வீடியோ வைரல் ஆகி வருகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள்