Breaking News

கோவின் செயலி பாதுகாப்பானது! மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

அட்மின் மீடியா
0

மத்திய சுகாதார துறையின் கோவின் செயலில் தனிநபர்களின் விவரங்கள் கசிவதாக தகவல்கள் வழியாக உள்ளது இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தரவுகள்:



இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவின் என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் மத்திய அரசு சார்பில் கோவின் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

அந்த கோவின் செயலியில் கொரோனா தடுப்பூசி செலுத்த பிறந்த தேதி, ஆதார் எண், பாஸ்போர்ட் எண், முகவரி என தங்களின் விவரங்களைப் பதிவுசெய்யவேண்டும் அப்படி கொரானா தடூப்பூசி செலுத்தியவர்கள் விவரம் தற்போது டெலிகிராம் மூலம் வெளியில் கசிந்ததாக செய்தி வெளியாகி உள்ளது

அதாவது டெலகிராமில் தனி நபர்களின் தொலைபேசி ஆதார் எண், புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற தரவுகள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவின் செயலி மிகவும் பாதுகாப்பானது. இச்செயலில் உள்ள தனிநபர் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக தான் உள்ளது. தகவல்கள் கசிவதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு CERT-In ஐ மத்திய சுகாதார அமைச்சகம் கோரியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback