Breaking News

40 கிலோமீட்டர் வேகத்தில் தான் வாகனத்தை இயக்கவேண்டும் மீறினால் அபராதம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் பகலில் வாகனங்களை 40 கி.மீ வேகத்திலும், இரவில் 50 கி.மீ வேகத்திலும் இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது

விதிகளை மீறுபவர்கள் தானியங்கி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு, அவர்களது மொபைல் எண்ணிற்கு அபராதம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும் - சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் தகவல்

 


சென்னை மாநகரில் வாகனங்களின் வேகத்தைக் கண்காணித்து அபராத ரசீது அனுப்பும் ஸ்பீடு ரேடார் கன் கருவி 30 இடங்களில் பொருத்தப்பட இருக்கிறது. 

முதல்கட்டமாக 10 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.மேலும்  20 இடங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படும் . பகல் நேரத்தில் 40 கிலோமீட்டர் வேகத்திலும்  இரவு நேரத்தில் 50 கிலோமீட்டர் வேகத்திலும் வாகனம் இயக்கவேண்டும்

விதியை மீறி கடந்து செல்லும் வாகனங்களை ஸ்பீடு ரேடார் கன் கருவி படம் பிடித்து, வாகன உரிமையாளருக்கு அபராத ரசீது குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback