Breaking News

ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து நடந்தது எப்படி? மாதிரி வீடியோ

அட்மின் மீடியா
0

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு 7 மணியளவில் ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த 650 பயணிகள் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து நடந்தது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே காரணம் என ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக அதனை ரத்து செய்ததால் விபரீதத்தில் முடிந்துள்ளது. 

இதனால் மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பச்சை சிக்னல் ரத்து செய்யப்பட்டதால் லூப் லைனில் சென்று, சரக்கு ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது

லூப் லைன் என்பது எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கு வழி விடுவதற்காக சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வழித்தடமாகும். லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதால் பெட்டிகள் தடம் புரண்டன. அதன்பின்பு கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் மீது எதிரே சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதியுள்ளது.ட்

ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி பெட்டிகள் மட்டும் மோதியதால் அந்த ரயிலில் பெரும் சேதம் ஏற்படவில்லை. 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸில் 3 பெட்டிகள் மட்டுமே தடம் புரண்டதால் அதில் சேதம் குறைவு எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்த உள்ள விசாரணையில் விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/ArkidDutta/status/1664843687921065984

https://twitter.com/arnabsingh01/status/1665150839088881664

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback