Breaking News

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை!

அட்மின் மீடியா
0
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
 

 
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி, கண்ணன் உள்ளிட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் 
 
இவ்வழக்கில் 68 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது .அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியும் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதன் முடிவில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது, அதில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார் அத்துடன் அவருக்கு உடனடியாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும்பாலியல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்30 நாட்களுக்குள் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியும் உத்தரவு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback