கல்வி உதவிதொகை பெற 30ம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவிதொகை பெற 30ம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்ப டும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கான இணையதளம் 2022-23ம் ஆண்டிற்கான மாணாக்கர்களின். விண்ணப்பங்களை பெற 30.1.2023 முதல் திறக்கப் பட்டு 4.10 லட்சம் மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 31ம் தேதி கல்வி உதவித்தொகை இணையதளம் முடிவுற்றது.
எனினும், 2022-23ம் கல்வியாண்டில் பயின்று கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தவறிய, விடுபட்ட மாணவ, மாணவிகளிடம் இருந்தும், கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், தற்போது இந்த இணையதளம் மீண்டும் திறக்கப்பட்டு வருகிற 30ம் தேதி வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்ட விதிமுறைகளின்படி இக்கல்வியாண்டு முதல், முதன்முறையாக ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண், இணையத்தில் பெறப்பட்ட சாதிசான்று, வரு மானச்சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணையவழியில் சரிபார்க்கப்பட்டு, மாணாக்கர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை சென்றடையும் வகையில் இணையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைய பக்கத்தில் கல்வி உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண் டும் என்பது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள காணொலி வீடியோ பார்த்து உரிய ஆவணங்களுடன் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் கடந்த 16-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:-
https://tnadtwscholarship.tn.gov.in/#
விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள:-
Tags: இந்திய செய்திகள்