கோவையில் விளம்பர பலகை சரிந்து 3 பேர் உயிரிழப்பு..! முழு விபரம்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கருமத்தம்பட்டியை அடுத்த தெக்கலூர் அருகே தனியார் நிறுவனத்தின் விளம்பர பலகை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது திடிரென அதிகமாக காற்று வீசியது
காற்று பலமாக வீச தொடதிடங்கியதில் இரும்பு ஆங்கிள்கள் ஆடதொடங்கியது உடனடியாக விளம்பரப் பலகையைக் கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இறங்கி தப்ப முயன்றார்கள்
அதற்குள் அந்த விளம்பரப் பலகை சரிந்துள்ளது. இதனால் அங்கே இருந்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் கருமத்தப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்தோரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது
Tags: தமிழக செய்திகள்