Breaking News

+2 தனித்தேர்வர்கள் 14 ம் தேதி முதல் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யலாம் அரசுத் தேர்வுகள் இயக்ககம்

அட்மின் மீடியா
0

+2 தனித்தேர்வர்கள் இந்த தேதியில் ஹால் டிக்கெட் டவுன்லோடு பண்ணிக்கலாம்.



பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதும் தேர்வர்கள் ஜூன் 14-ம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த தேர்வர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஜூன் 14-ம் தேதி (புதன்கிழமை) முதல் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.

அரசு தேர்வுகள் இயக்ககம் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


10, 11, 12 ம் வகுப்பு தேர்வு TIME TABLE முழு விவரம்!

https://www.adminmedia.in/2023/05/10-11-12-time-table.html

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback