Breaking News

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா - பள்ளி கல்வித் துறை விளக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா - பள்ளி கல்வித் துறை விளக்கம் முழு விவரம்

 


தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு நடமுறையில் இருந்தது.அதன்பின்பு சில வருடங்களுக்கு முன்பு 11-ஆம் வகுப்பு தேர்வையும் பொதுத்தேர்வாக தமிழக அரசு அறிவித்தது

இந்நிலையில் மாணவர்கள் 10,11,12 என தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வை சந்திப்பதால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள் இதனால் மாணவர்கள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு பல மாணவர்கள் டிப்ளமோ படிப்பை தேர்வு செய்துள்ளார்கள் அதனால் பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என  சமூக வலைத்தளங்களிலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது. 

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை. தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback