இன்று 10 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது வங்கக் கடலில் தென்கிழக்கு கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் இன்று 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான இடி-மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மதுராந்தகம் (செங்கல்பட்டு), தரமணி (சென்னை) இடங்களில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்