Breaking News

சனி கோள் நிலாவில் கடல் நாசா வெளியிட்ட புகைப்படம் Saturn's moon Enceladus

அட்மின் மீடியா
0

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக சனி கிரகத்தின் நிலாவில் கடல் இருக்கும் ஒரு பகுதியை, நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் படம் எடுத்துள்ளது.



Saturn's moon Enceladus சனி கோளின் சந்திரனான என்செலடஸ்

சனி கோளின் சந்திரனான என்செலடஸ் என்ற நிலவிலிருந்து 9,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரூற்று வெளியேற்றப்படுவது ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் என்செலடஸ் நிலவின் அளவைவிட 20 மடங்கு தொலைவிற்கு நீர் வெளியேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலவை சுற்றியுள்ள வளையம் போன்ற அமைப்பில் இருந்து நீர் மூலக்கூறுகள் உறிஞ்சப்படுவதாகவும், அவை மீண்டும் வெளியேற்றப்படுவதாகவும் ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

நாசா விஞ்ஞானிகள்.சனி கிரகத்தின் வளையங்களில் சேர்ந்திருக்கும் தூசுகளுக்கு இந்தக் கடலிலிருந்து ஆவியாகும் மினரல்களே காரணமாக இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. இந்த நிலவில் கடல் இருக்கும்போது, அந்தக் கடலில் உயிரினங்களும் வசிக்கக்கூடும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே அதற்கான ஆராய்ச்சி இப்போது தொடர்கிறது.

மேல் உள்ள படத்தில், நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், சனியின் சந்திரன் என்செலடஸின் தென் துருவத்திலிருந்து நீர் நீராவி ப்ளூம் ஜெட் செய்வதைக் காட்டுகிறது, இது சந்திரனின் அளவை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. இன்செட், காசினி ஆர்பிட்டரில் இருந்து எடுக்கப்பட்ட படம், நீர் ப்ளூமுடன் ஒப்பிடும்போது வெப் படத்தில் என்செலடஸ் எவ்வளவு சிறியதாக தோன்றுகிறது என்பதை வலியுறுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு:-

https://twitter.com/NASAWebb/status/1663564067544629259


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback