Breaking News

பாலிடெக்னிக் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் polytechnic admission

அட்மின் மீடியா
0

பலதொழில்நுட்பப் பயிலகம் அல்லது பலதொழில்நுட்பக் கல்லூரி (Polytechnics) என்ற கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் புரட்சியை விரைவுபடுத்த பல தொழில்நுட்பங்களில் நுட்ப அறிவை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டவை. 


இவை எந்த பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்படாமல் மாநில அரசின் தொழில்நுட்ப கல்வித்துறையின் மேற்பார்வையில் இயங்குகின்றன

.தேசிய அளவில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் இவற்றை முறைப்படுத்துகிறது.இவை தொழில்நுட்பப் படிப்பின் இறுதியில் பட்டயங்கள் வழங்குகின்றன. 

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கற்கும் கல்வியின் சுருக்கமான பதிப்பாக இவை வழங்கும் கல்வி அறியப்படுகிறது. இப்பயிலகங்களில் பயின்றவர் அடிப்படை தொழில்நுட்ப திறனை கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். தொழிலகங்களில் இவர்கள் மேற்பார்வையாளர்களாக அல்லது இளநிலை பொறியாளர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

பலதொழில்நுட்பப் பயிலகங்களில் சேர குறைந்த தகுதி மாநில பள்ளியிறுதி பத்தாம் வகுப்பு சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பயிலகங்களில் பட்டயம் பெற்ற மாணவர் பல்கலைக்கழகங்களின் பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர தகுதியுடையவராகிறார்.

தமிழக அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகளுக்கு முதலாமாண்டு சேர்க்கை விண்ணப்பம் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி / ITI தேர்ச்சி பெற்றமாணவ, மாணவிகளுக்கு 2023-2024ம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு (டிப்ளமோ சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

2023- 24 கல்வியாண்டில் முதல் பட்டய படிப்பு சோ்க்கை பெறும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மட்டும் ரூ. 1000 மாதம்தோறும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்:-


விண்ணப்பிக்க:-


மேலும் விவரங்களுக்கு:-


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback