Breaking News

கர்நாடகத்தில் யார் ஆட்சி ? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் முழு விவரம் Karnataka Election 2023 Exit Poll Results

அட்மின் மீடியா
0

கர்நாடகத்தில் யார் ஆட்சி ? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் முழு விவரம் Karnataka Election 2023 Exit Poll Results


2018 தேர்தல்:-

224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை 2018 ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 110 இடங்களில் பாஜக, 78 இடங்களில் காங்கிரஸ்,ஜனதாதளம் 37 இடங்களில் வெற்றி பெற்றது, 110 இடங்களில் வென்ற பா.ஜ.க. 6 சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.  எடியூரப்பா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 

சட்டமன்ற வாக்கெடுப்பில் எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. பொறுப்பேற்ற 3 நாளில் ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 

அதன்பின்பு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டனி அமைத்து  குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார் ஆனால் 14 மாதத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மீண்டும் பாஜக  பசவராஜ் பொம்மை தலைமையில் ஆட்சியமைத்தது.




2023 தேர்தல்:-

கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது

கர்நாடகாவில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. 

அதேபோல் காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை பிடித்து மீண்டும் ஆட்சி அரியணையில் அமர தீவிர தேர்தல் பிராசாரத்தில் ஈடுபட்டது.

கர்நாடக தேர்தலில் பா.ஜ., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப்போட்டி நிலவுகின்றது

இந்நிலையில் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடந்து முடிந்தது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

நியூஸ் நேசன் கருத்துக்கணிப்பு முடிவுகள்:-

பாஜக 114 தொகுதிகள் கைப்பற்றும் 

காங்கிரஸ் 86 தொகுதிகள் கைப்பற்றும் 

மதசார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகள் கைப்பற்றும் 


டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:-

பாஜக 114 தொகுதிகள் கைப்பற்றும் 

காங்கிரஸ் 86 தொகுதிகள் கைப்பற்றும் 

மதசார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகள் கைப்பற்றும் 

மற்றவை -03 தொகுதிகள் கைப்பற்றும் 


சவர்ணா நியூஸ் ஜான்கிபாத் கருத்துக்கணிப்பு முடிவுகள்:-

பாஜக 94-117 தொகுதிகள் கைப்பற்றும் 

காங்கிரஸ்  91-106 தொகுதிகள் கைப்பற்றும் 

மதசார்பற்ற ஜனதா தளம் 14-24 தொகுதிகள் கைப்பற்றும் 


டி.வி.-9 கருத்துக்கணிப்பு முடிவுகள்:-

காங்கிரஸ் 99-109 தொகுதிகள் கைப்பற்றும் 

பாஜக 88-98 தொகுதிகள் கைப்பற்றும் 

மதசார்பற்ற ஜனதா தளம் 21-26 தொகுதிகள் கைப்பற்றும் 


ஏபிபி சி ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்:-


காங்கிரஸ்  81-101 தொகுதிகள் கைப்பற்றும் 

பாஜக  66-86 தொகுதிகள் கைப்பற்றும் 

மதசார்பற்ற ஜனதா தளம் 20-27 தொகுதிகள் கைப்பற்றும் 



ரிபப்ளிக் டி.வி கருத்துக்கணிப்பு முடிவுகள்:-

காங்கிரஸ் 94-108 தொகுதிகள் கைப்பற்றும் 

பாஜக 85-100 தொகுதிகள் கைப்பற்றும் 

மதசார்பற்ற ஜனதா தளம் 24-32 தொகுதிகள் கைப்பற்றும் 

பிற கட்சிகள்: 2-6 தொகுதிகள் கைப்பற்றும் 


ஜி.நியூஸ் மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:-


காங்கிரஸ் 103-118 தொகுதிகள் கைப்பற்றும் 

பாஜக 79-94 தொகுதிகள் கைப்பற்றும் 

மதசார்பற்ற ஜனதா தளம் 25-33 தொகுதிகள் கைப்பற்றும் 

மற்றவை: 2-5 தொகுதிகள் கைப்பற்றும் 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback