Breaking News

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் சர்ச்சை கார்பன் டேட்டிங் பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை gyanvapi masjid case

அட்மின் மீடியா
0

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் அறிவியல் ஆய்வு கார்பன் டேட்டிங் பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என்பது குறித்து அறிவியல் ஆய்வு செய்வதற்கு கடந்த வராம் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். மசூதிக்குள் ஆய்வு நடத்தி விடியோ பதிவு செய்ய நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. 

அப்போது மசூதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீா் தேக்கம் தொட்டியில் சிவலிங்கம் இருப்பதாக அந்தக் குழு தெரிவித்ததால் பெரும் சா்ச்சை எழுந்தது. 

ஆனால்  ஞானவாபி மசூதிக்குள் உள்ளது சிவலிங்கம் அல்ல என்றும் அது செயற்கை நீரூற்று அமைப்பு இவர்கள் சிவலிங்கம்னு சொல்றது, தொழுகைக்கு பள்ளிவாசல் செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல் தான் அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு இருக்கும் என மசூதி தரப்பில் கூறப்பட்டது 

இந்நிலையில் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என்பது குறித்து அறிவியல் (carbon dating) பூர்வமாக ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யும்போது கட்டிடத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்பட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்ற்த்தில் மேல்முறையிடு செய்தார்கள்  அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கார்பன் டேட்டிங் அறிவியல் பரிசோதனைக்கு இடைக்கால விதித்தது மேலும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளதால் இதனை கவனமாக கையாள வேண்டும். எனவே, உத்தரவை அமல்படுத்துவது அடுத்த தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவித்தது

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback