Breaking News

FACT CHECK பெண்களின் கபூரை கிரில் கேட்டால் பூட்டிய பெற்றோர்கள் எனத் பொய்யான செய்தி பரப்பிய ஊடகங்கள் ! உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பாகிஸ்தானில் பெண் சடலங்களைக் கூட விட்டுவைக்காமல் அதனைத் தோண்டி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம் நடந்து வருகின்றது எனவே அங்கு பெண்ணின் கபூர்களை இரும்பு கிரில் கொண்டு பூட்டி வைக்கின்றார்கள் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியினையும் பலர் உணமை என ஷேர் செய்து வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது, 

அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ, என்டிடிவி, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே மேலும் தமிழில்  ராஜ்நியூஸ், விகடன் செய்திபுனல் ,ஜபிசி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு ஊடக தளங்கள் 

பாகிஸ்தானில் பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பூட்டுப் போட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பெண்கள் மீதான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டுப் போடும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம், பாகிஸ்தானில் நெக்ரோஃபிலியா என்ற நோயின் பயம் அதிகரித்துள்ளதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்களுடன் உடலுறவு கொள்வதாகவும் கூறப்படுவதே ஆகும்.

நெக்ரோஃபிலியா என அழைக்கப்படும் இத்தகைய கொடூர மனநிலை, இறந்த உடல்களுடன் உடலுறவு கொள்வதன் மூலம் இன்பம் பெறுவதை குறிக்கிறது. என செய்தி வெளியிட்டிருந்தன.

உண்மை:-

ஆனால் பலரும் வெளியிட்ட  அந்த செய்தி பொய்யானது ஆகும்  உண்மையில் அது போல் ஓர் சம்பவம் நடக்கவில்ல ஆனால் நடக்காத ஓர் சம்பவத்தை நடந்தது போல் செய்தி வெளிட்டுள்ளார்கள்

உண்மையில் ஹைதராபாத்தில் உள்ள மதன்னாபேட் என்னும் ஊரில் உள்ள முசாபர் அலி யின் தாயார் சுமார் 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டர் அவரது உடல் அருகில் உள்ள தாராப்ஜங் காலனியில் உள்ள கல்லறையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு  அடக்கம் செய்யப்பட்டது’

ஏற்கெனவே அங்குள்ள கல்லறைகளைத் தோண்டி, மற்ற இறந்தவர்களைப் புதைக்கின்றார்கள் என்பதால் முசாபர் அலி தனது தாயின் கபூருக்கு இரும்பால் ஆன கிரில் கேட்டை அங்கு பதித்துள்ளார்
மேலும் அவர்  கதவு நிறுவப்படகல்லறை, அந்த இடத்தின் நுழைவு வாயிலின் அருகில் இருப்பதால், மக்கள் தவறுதலாக அதன் மீது கால் வைத்து விடாமல் இருக்கும் பொருட்டு, அந்தக் குடும்பத்தினர் இதை நிறுவியுள்ளார்கள் என ஹைதரபாத்தை சேர்ந்த சூர்யா ரெட்டி என்ற பத்திரிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 


முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்:-

https://twitter.com/jsuryareddy/status/1652746637218029568

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback