அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கல்லூரியில் B.Tech., B.F.A., படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் Degree in Traditional Architecture
மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கல்லூரியில் B.Tech., B.F.A., படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
கல்விதகுதி:- 12 ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க:-
https://www.artandculture.tn.gov.in/
விண்ணப்பிக்க கடைசிநாள்:- 30.06.2023
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரியாக, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது
தொழில்நுட்பவியல் இளையர் மரபுக் கட்டடக்கலைப் பட்டப்படிப்பு
B.Tech., Degree in Traditional Architecture
கவின்கலை இளையர் மரபுச் சிற்பக்கலைப் பட்டப்படிப்பு
B.F.A - Traditional Sculpture
1) கல் சிற்பம் (Stone Sculpture)
2) உலோகச் சிற்பம் (Metal Sculpture)
3) மரச்சிற்பம் (Wood Sculpture)
4) சுதைச்சிற்பம்
கவின்கலை இளையர் மரபு ஓவியம் மற்றும் வண்ணம் பட்டப்படிப்பு
B.F.A Traditional Drawing and Painting
கல்வி தகுதி:-
இளையர் மரபுக் கட்டடக்கலைப் பட்டப்படிப்புக்கு (B.Tech., Degree in Traditional Architecture) 12 ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கவின்கலை இளையர் மரபுச் சிற்பக்கலைப் பட்டப்படிப்பு மற்றும் கவின்கலை இளையர் மரபு ஓவியம் மற்றும் வண்ணம் பட்டப்படிப்புகளுக்கு 12 ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 26 வயது நிறைவடையாமலும், பிற பிரிவினர் 23 வயது நிறைவடையாமலும் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:-
https://artandculture.tn.gov.in/node/add/architecture-sculpture
Tags: கல்வி செய்திகள்