Breaking News

குழந்தைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0
மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வுகள் நிறைவு பெற்று, கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. 

கோடை விடுமுறை என்பது புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள நல் வாய்ப்பாக கற்று கொடுங்கள்

கோடை விடுமுறை அனுபவங்கள் அவர்களின்  தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வாழ்ழகைக்கு உதவும் வகையில் திட்டமிடுங்கள்

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், பிள்ளைகள் பகல் நேரங்களில் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே செல்வதை கண்காணிக்க வேண்டும். 

நீர் நிலைகளின் அருகே சென்று விளையாடுவதை அல்லது குளிப்பதை தவிர்க்குமாறும், உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். 

உறவினர்களுக்கு கடிதம் எழுத கற்று கொடுங்கள்

அதே போல் வங்கிக்கு சென்று பணம் போடுவது ,பணம் எடுப்பது எப்படி, அங்குள்ள படிவங்களை பூர்த்தி செய்வது எப்படி என்று கற்று கொடுங்கள்

தையல் பயிற்ச்சி கற்று கொடுங்கள், பட்டன் தைப்பது , சிறிய கிழிந்ததுணிகளை தைப்பது எப்படி என்று கற்று கொடுங்கள்

கோடைகாலத்தில், ஒரு கோப்பை தண்ணீர் மாடிக்கு கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளுங்கள், ஏனென்றால் பறவைகள் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீரின் மதிப்பை அறிய முடியும், 

மின்சார டிரான்ஸ்பார்மர்கள், கம்பங்கள் ஆகியவற்றின் அருகில் விளையாட அனுமதிக்க கூடாது

மிகவும் முக்கியமாக வீட்டினை சுத்தம் செய்ய கற்று கொடுங்கள்

18 வயது நிரம்பாத மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாத பிள்ளைகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்காமல் கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாகும். 

உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கோ அல்லது சுற்றுலா தலங்களுக்கோ செல்லும் பொழுது மிகக் கவனமாக இருக்க வேண்டும்

தோட்டக் கலையைக் கற்றுக்கொடுங்கள்

அதேபோல் முடிந்தால் குழந்தைகளுக்கு சமையல் கற்றுக்கொடுங்கள், சிண்டரை கையாளுவது எப்படி, டீ போடுது , கஞ்சி செய்வது என கற்றுகொடுங்கள்

கைவினைப் பொருள்களை செய்ய கற்றுக்கொடுங்கள் வீட்டில் உள்ள பேப்பர், மற்ரும் துணிகள், அட்டைகள் வைத்து ஏதாவது பொருட்கள் செய்ய கற்று கொடுங்கள்

பிள்ளைகளை விடுமுறை முடியும்வரை கண்காணியுங்கள்

ஆரோக்கியமான உணவாக கொடுங்கள்

மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள்.

கண்டிப்பாக செல்போன் கொடுக்காதீர்கள்

உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்ன உறவு என்பதை சொல்லிக்கொடுங்கள்

உடல் பயிற்சியை தினசரி செய்ய அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நீங்களும் அவர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டும். 

நோயாளிகளை சந்திக்க கற்றுக்கொடுங்கள்

பள்ளிவாசலுக்கு தொழ ஏவுங்கள். நீங்களும் தொழுங்கள்

இஸ்லாமிய கோடைகால பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுங்கள்

இஸ்லாமிய வரலாற்றை சொல்லிக்கொடுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback