Breaking News

என்ஜினீயரிங் படிப்புக்கு ஆகஸ்டு 7-ந்தேதி கலந்தாய்வு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் போன்ற என்ஜினீயிரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது. இந்நிலையில் உத்தேச அட்டவணை வெளியாகி உள்ளது

 


விண்ணப்பிக்க கடை சி நாள்:-

ஜூன் 6-ந்தேதி 

ரேண்டம் எண் வெளியிடப்படும் நாள்:-

ஜூன் 7-ந்தேதி 

சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும் நாள்:-

ஜூன் 12-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 

தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் நாள்:-

ஜூலை 12-ந்தேதி

வரிசை பட்டியல் குறைகள் இருந்தால் 

ஜூலை 13-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சரி செய்து கொள்ளலாம்.

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு :-

ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பங்கேற்பார்கள். 

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 7-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback