12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள tn results 2023
தமிழகத்தில் 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 8 ம்தேதி இன்று வெளியாகும்
தமிழகத்தில் பிளஸ் 12 பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் மே 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
>12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை, 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும், தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜுன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.
ரிசல்ட் பார்ப்பது எப்படி:-
கீழ் உள்ள லின்ங்கில் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான்
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க:-
என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் வழங்கப்படும்.
மாணவ மாணவிகளே வெப்சைட் லின்ங் வெலை செய்யவில்லையா கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்யுங்க ரிசல்ட்டை உடனுக்குடன் பாருங்க
12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்
https://play.google.com/store/apps/details?id=io.cordova.myappac191c
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்