பெற்றோர்களே உஷார் கேரளாவில் மொபைலில் வீடியோ பார்த்துகொண்டிருந்தபோது போன் வெடித்து 8 வயது சிறுமி பலி thrissur mobile phone explodes child killed
கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார்ரின் மகள் ஆதித்யா ஶ்ரீ தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரு கின்றார். இவரது அம்மா கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். சிறுமி ஆதித்யா நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல் ஃபோனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழையனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மொபைல் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரனையில் மேலும் மமொபைல் போன் வெடிக்கும் போது ஆதித்யஸ்ரீ மற்றும் அவரது பாட்டி மட்டுமே வீட்டில் இருந்தனர். பாட்டி சமையல் அறைக்கு உணவு எடுத்துச் சென்றபோது போன் வெடித்தது.
குழந்தை நீண்ட நேரம் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததால் பேட்டரியின் அதிக வெப்பம் வெடிப்புக்கு வழிவகுக்கும் என்றும். தடயவியல் பரிசோதனைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும்
மேலும் வெடித்த அந்த போன் மூன்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டது என்றும் ஆதித்யஸ்ரீயின் மாமா அப்பாவுக்கு போனை வாங்கி கொடுத்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு போனின் பேட்டரி மாற்றப்பட்டுள்ளது என்றும் விசாரனையில் தெரியவந்துள்ளது
Tags: இந்திய செய்திகள்