மசூதி கட்ட தடை கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு ₹25,000 அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை புரசைவாக்கம் ரப்பணியா அரபு கல்லூரியில் கட்டப்பட்டு வரும் மசூதியை அகற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில், மாநகராட்சியின் அனுமதியின்றி மசூதி கட்டப்பட்டு வருகிறது ஆனால் நூறு மீட்டர் தூரத்தில் மிகவும் பழமையான சிவன் கோயில் உள்ளது எனவே மசூதி கட்ட தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார்
இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது அதில் கல்லூரி வளாகத்தில் வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மசூதி கட்டப்படுகிறது என கூறியதை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பொதுநல நோக்குடன் இந்த வழக்கு தொடரப்படவில்லை எனக் கூறி, 25 ஆயிரம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags: தமிழக செய்திகள்