Breaking News

பொய்யான செய்தியினை நம்பாதீங்க குழந்தைகளை கடத்த தமிழ்நாட்டிற்கு வந்த வடமாநில கும்பல் என பரவும் வதந்தி

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பலரும்  ஓரு ஆடியோவையும் ஒரு போட்டோவையும் ஷேர் செய்து வருகின்றார்கள் 

அந்த ஆடியோவில்:-

இந்த போட்டோவில் இருப்பவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக போலீசால் அரஸ்ட் செய்யப்பட்டவர்கள். இவங்க 200 பேருக்கு மேல் பீகார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறங்கி இருக்கிறார்கள். இவர்கள் குழந்தைகளை கடத்துவதற்காக வந்த கும்பல் என அந்த 1.22 நிமிட ஆடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது




அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படத்தை குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு  ஆராய்ந்தது, மேலும் அந்த புகைபடத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் அந்த புகைப்படம்  2018 ம் ஆண்டு முதல் இணையத்தில் பரவி வருகின்றது

2018 ம் ஆண்டு இந்த புகைப்படங்கள் ழந்தை கடத்தல் கும்பல் என பெங்களூரில் பரவியது அப்போது பெங்களூர் நகர காவல் தனது டிவிட்டர் பக்கதில் அது பொய்யான தகவல் என விளக்கம் அளித்தது


முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

பெங்களூர் காவல் டிவிட்டர்

https://twitter.com/check4spam/status/992005102193008640

குழந்தைகளை கடத்தி  உறுப்புகளை விற்பனை செய்கின்றார்களா? உண்மை என்ன

https://www.adminmedia.in/2019/08/blog-post_66.html

FACT CHECK சூட்கேஸில் குழந்தை கடத்தல் என பரவும் வதந்தி வீடியோ ... யாரும் நம்பாதீர்கள்.... உண்மை என்ன...

https://www.adminmedia.in/2022/01/fact-check.html

சேலத்தில் குழந்தை கடத்த 400 பேர் வந்துள்ளார்கள் என பரவும் செய்தி உண்மை என்ன salem Kidnap rumour 

https://www.adminmedia.in/2022/12/400-salem-kidnap-rumour.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback