Breaking News

FACT CHECK சூட்கேஸில் குழந்தை கடத்தல் என பரவும் வதந்தி வீடியோ ... யாரும் நம்பாதீர்கள்.... உண்மை என்ன...

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அதில் ஒருவர் ஒரு சூட்கேசை கையில் எடுத்து வருகின்றார் , அந்த சூட்கேஸில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்கின்றது, அக்கம் பக்கம் இருப்பவர்கள்   சிலர் அந்த நபரை பிடித்து சூட்கேஸை திறந்து பார்த்தால் அதில் ஒரு குழந்தை உள்லது  குழந்தையை கடத்தும் வட நாட்டினர்கள் என அந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது




அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையாக நடந்தது இல்லை, அது ஒரு சமூக விழிப்புணர்வுக்காக எடுக்கபட்ட ஒரு வீடியோவாகும்

அந்த வீடியோ  ராஜுபாரதி   என்பவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், மேலும் அவர் ஒரு நகைச்சுவை நடிகர் ஆவார், அந்த வீடியோ போல் அவர் பேஸ்புக் பக்கத்தில் பல விழிப்புணர்வு வீடியோக்கள் உள்ளது


மேலும் பலரும் ஷேர் செய்யும்  அந்த  வீடியோவில் சிவப்பு தொப்பி அணிந்த நபர்தான் அவர்

எனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ சமூக விழிபுணர்வுக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாகின்றது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://fb.watch/aePjshEMOq/


https://fb.watch/aePgW2Ff6c/


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback