Breaking News

குழந்தைகளை கடத்தி உறுப்புகளை விற்பனை செய்கின்றார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் குழந்தைகளை கடத்தி உடல் உறுப்புகளை எடுத்து விற்கின்றார்கள் என்று ஒரு சில படங்களையும் அதனுடன் ஓர் ஆடியோவையும் ஷேர் செய்கின்றார்கள்








அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம்

சமூக வலைதளங்களில் தற்போது உண்மை செய்திகளை விட பொய்யான செய்திகளே அதிகம் வலம் வருகின்றது .

யாராவது எதையாவது சொன்னால் அதனை அப்படியே நம்பி மற்றவர்களுக்கு ஷேர் செய்வது

நாம் சிந்திக்கதான் இறைவன் நமக்கு ஆறாவதாக ஒரு அறிவை கொடுத்துள்ளான் ஆனால் நாம் அதனை மழுங்கடித்து வீண் விஷயங்களில் முழ்கியுள்ளோம்.

சரி விஷயத்திற்க்கு வருவோம்.  புகைப்படம் 1


பலரும் ஷேர் செய்யும் செய்தியில் உள்ள இந்த புகைப்பட சம்பவம் கானா நாட்டில் நடந்த விபத்தாகும்

மேலும் அந்த சம்பவம் 20.03.2017 ம் ஆண்டு நடந்தது

கானா நாட்டில் உள்ள Kintampo Waterfall ல் சுற்றி பார்க்க சென்ற கல்லூரி மாணவ மாணவிகள். அங்கு திடிரென ஒரு மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டார்கள்  இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

அட்மின் மீடியா ஆதாரம் 1 




அட்மின் மீடியா ஆதாரம் 2




 அட்மின் மீடியா ஆதாரம் 3




மேலும் இந்த சம்பவம் கேமருன் நட்டில் நடந்த இனபடுகொலை என்றும் வதந்தி பரவுகின்றது.



 புகை படம் 2

 இந்த புகைபடம் ஹரித்துவார் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஒரு குடிம்பத்தார்

காரில் இடம் இல்லாததால் குழந்தைகளை டிக்கியில் அமர வைத்து அழைத்து சென்ற போது சிலர் குழந்தை கடத்தல் கும்பல் என்று விசாரிக்க போலிஸார் வந்து விசாரித்து அவர்கள் குழந்தைதான் என்று தெரியவந்தது

அட்மின் மீடியா ஆதாரம் 4




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback