Breaking News

தயிர் பாக்கெட்டுகளில் தஹி என இந்தியில் அச்சிட முடியாது – தமிழக அரசு மறுப்பு

அட்மின் மீடியா
0

தயிர் பாக்கெட்டுகளில் தஹி என அச்சிட முடியாது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


தயிர் பாக்கெட்டில் தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. 

இந்த நிலையில், தயிர் பாக்கெட் மீது தஹி  என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் மத்திய அரசின் முடிவை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர் ஆவின் தயிரில் தஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது. இந்தியை சேர்க்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தயிர் பாக்கெட் மீது தஹி என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. தயிர் என்றே குறிப்பிடப்படும் என தெரிவித்தார்.

மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது டிவிட்டரில் எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, 

தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். 

மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!இந்தி திணிப்பை நிறுத்துங்கள்’ 

குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback