Breaking News

3 மாநில தேர்தல், 5 மாநில இடைதேர்தல் வெற்றி பெற்றவர்கள் யார் யார்? முழு விவரம்

அட்மின் மீடியா
0

3 மாநில தேர்தல், 5 மாநில இடைதேர்தல் வெற்றி பெற்றவர்கள் யார் யார்? முழு விவரம்



நாகலாந்து மாநிலம் மொத்தம் 60 தொகுதிகளை கொண்டது. அங்கு பாஜக - தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடர்ந்து வரும் நிலையில் மீண்டும் பாஜக - என்டிபிபி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 

பாஜக 12 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. அதன் கூட்டணி கட்சியான என்டிபிபி 25 இடங்களில் வென்றுள்ளது. 

மேலும் நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக 2 பெண்கள் எம்.எல்.ஏக்களாகி உள்ளனர். இந்த இருவருமே பாஜகவின் கூட்டணி கட்சியான என்டிபிபியை சேர்ந்தவர்கள்.

நாகாலாந்து  மாநில தேர்தல் முடிவுகள்

பாஜக + என் டி.பி:- 37

NPP    5


60 தொகுதிகளை உள்ளடக்கிய மேகாலயா மாநிலத்தில் கடந்த முறை பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்றன. ஆனால், இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலால் ஆளும் கூட்டணியில் இருந்து பாஜக விலகியது. எனவே ஆளும் என்பிபி மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. 

மேகாலயாவில் தேர்தலுக்கு முன்னர் என்பிபி, பாஜக கூட்டணி ஆட்சி இருந்தது. தேர்தலின் போது இந்த கூட்டணி பிளவுபட்டு தனித்தனியே தேர்தலை சந்தித்தன. 

என்பிபி கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்தன. பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். இதனால் தொங்கு சட்டசபை உருவானது. 

மேலும் என்பிபியின் யுடிபி கட்சியுடன் என்பிபி மேகாலயாவில் ஆட்சி அமைக்கிறது. 

மேகாலயா  மாநில தேர்தல் முடிவுகள்

காங்கிரஸ்:- 5

NPP    :- 26

TMC 5

BJP 2


திரிபுரா மாநிலத்தில் 60 தொகுதிகளில் ஆளும் பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தற்போது அக்கட்சி 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ஆர்.எஸ்.பி, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது

திரிபுராவைப் பொறுத்தவரையில் பாஜக 32 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 1 இடத்திலும் வென்றுள்ளது. இதனால் திரிபுராவிலும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுவிட்டது. 

திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள்

பாஜக:- 33

கம்யூனிஸ்டு :-14

TMP 13

அதேபோல் இந்தியாவில் 

தமிழ்நாடு, 

அருணாச்சல பிரதேசம், 

ஜார்க்கண்ட் , 

மஹாராஷ்டிரா, 

மேற்கு வங்கத்தில் 

ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.


தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் திமுக கூட்டணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தின் பா.ஜ.,வை சேர்ந்த ஜம்பே தஷி காலமானார். இவரது மறைவை தொடர்ந்து, லும்லா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஷெரிங் லாமு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு ஏஜேஎஸ்யுபி வேட்பாளர் சுனிதா சவுத்ரி வெற்றி பெற்றார்.

மஹாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கஸ்பாபெத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாங்கேகர் ரவீந்திர ஹேமராஜ் வெற்றி பெற்றார்.

சின்ச்வாடு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வினி லட்சுமன் ஜெகதீப் வெற்றி பெற்றார்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்காளத்தில் சாகர்டிகி சட்டசபை தொகுதியில், திரிணமுல் கட்சி எம்.எல்.ஏ மறைவை தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் தேபாஷிஷ் பானார்ஜி வெற்றி பெற்றார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback