Breaking News

புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் முதலவர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

 

 

புதுச்சேரி அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று (மார்ச் 13) தாக்கல் செய்யப்பட்டது. அதில் மக்களுக்கு பயனுள்ள பல நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். 

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 12 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது  முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அதில், புதுவையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் 

தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுவையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும் 

மீனவர் உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.3,500-ஆக உயர்த்தப்படும் 

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். 

உள்ளூர் பேருந்துகளில் பட்டியல் இன பெண்கள் இலவச பயணம் 

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் 

மேலும் புதுச்சேரி அரசுத் துறைகளில் பல காலியிடங்கள் நிரப்படாமல் இருப்பதாக ஏற்கனவே பல முறை அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் 6000 பணியிடங்கள் நேரடியாகவும் 4000 பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback