Breaking News

10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி

அட்மின் மீடியா
0

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மார்ச் 17ம் தேதி முதல் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

நுழைவு சீட்டை அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் மார்ச் 20 முதல் மார்ச் 24-ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைப்பெற உள்ளது. செய்முறை தேர்வு குறித்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு தனித்தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய:-

www.dge.tn.gov.in 

என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து  ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback