Breaking News

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி! Vivek Ramaswamy announces he will run for president

அட்மின் மீடியா
0

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடுகிறார்.



அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளது.

இந்நிலையில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த குடியரசுக்கட்சியைச்சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் களமிறங்குகிறார். குடியரசுக்கட்சியின் சார்பில் ஏற்கனவே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்திய-அமெரிக்கரான நிக்கி ஹேலியும் அவருக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்த நிலையில் விவேக்கும் களமிறங்க உள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளர்கள் முதலில் தங்கள் கட்சிகளுக்குள் ஆதரவைப் பெற வேண்டும், பின்னர் அவர்கள் இறுதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியாளரை எதிர்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் அதிபா் தோ்தல் அடுத்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்தத் தோ்தலில் போட்டியிடும் தனது முடிவை குடியரசு கட்சியைச் சோ்ந்த முன்னாள் அதிபா் ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலி ஆகியோர் விரும்ப மனு அளித்துள்ளனர்.இந்நிலையில், அதிபர் தோ்தலில் போட்டியிட குடியரசு கட்சியைச் சோ்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமியும் விருப்ப மனு அளித்துள்ளார்.

கேரளத்தில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயா்ந்த இந்திய தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா் விவேக் ராமசாமி. அவரின் தந்தை மின் பொறியாளராகவும், தாய் முதியோா் மனநல மருத்துவராகவும் இருந்தனா். அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டியில் பிறந்த விவேக் ராமசாமி, புகழ்பெற்ற ஹாா்வா்ட், யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவா். அவரின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.4,140 கோடி) அதிகம் என்று கூறப்படுகிறது.அதிபா் தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முன்னா், குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback