Breaking News

சீனாவின் ராட்சச உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா ராணுவம் வீடியோ US shoots down suspected Chinese spy balloon

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் சந்தேகத்திற்கிடமாக காணபட்ட சீன உளவு பலூனை ஏவுகனை மூலம் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா 


கடந்த 2 தினங்களாக அமெரிக்க வான்வெளியில் சீனாவின் கண்காணிப்பு பலூன் பறந்ததை அடுத்து அமெரிக்கா பரபரப்பானது, 

அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் உள்ள அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இதற்கிடையே, அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.முதலில் வெள்ளை நிறத்தில் எதோ பறக்கிறது என்று மட்டுமே கூறப்பட்டது. அதன்பின்பு அது ஓர் ராட்சச பலூன் என தெரியவந்தது மேலும் பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்கள் அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன. பெரிய ராட்சச சோலார் பேனல்கள் இதில் இருந்தன. அதோடு இவை ஹீலியம் உதவியுடன் வானில் பறந்து வந்துள்ளன. 

அதன்பின்பு அமெரிக்கா ரானுவம் அதனை தொடர்ந்து கண்காணித்து வந்தது, அந்த பலூன் யாருடையது எதற்க்காக அமெரிக்காவை கண்காணிக்க அனுப்பபட்டது என தொடர் விசாரனையில் அது சீன நாட்டில் இருந்து வந்தது என தெரிய வந்தது மேலும் அந்த பலூன் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இவை பறந்து இருக்கின்றன. 

முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது. இதற்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது என்று கூறிய நிலையில் இது எங்களுடைய பலூன்தான். அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் இது பறந்து கொண்டு இருந்தது. இது வானிலை ஆய்வுக்காக பறக்க விடப்பட்டது வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை. மேலும் முக்கியமாக இது உளவு கருவி எதையும் கொண்டு இருக்கவில்லை. அதீத காற்று காரணமாக திசை மாறி அமெரிக்காவின் வான் எல்லைக்குள் இது தவறுதலாக நுழைந்துவிட்டது என்று சீனா விளக்கம் அளித்தது.

ஆனால் சீனாவின் விளக்கத்தை ஏற்க்க மறுத்த அமெரிக்கா உளவு பார்க்கவே சீன பலூன் வந்துள்ளதாக உறுதியாக நம்பியது, அந்த பலூனுக்கு கண்காணிப்பு திறன் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், கீழே இருந்து பார்க்கச் சிறிய பலூன் போலத் தெரிந்தாலும் கூட.. அந்த பலூன் மூன்று பஸ் அளவுக்கு பெரியதாம். 

சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் முக்கிய பாதுகாக்கப்பட்ட இடங்களில் பறந்ததை அடுத்து அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் தனது சீனா செல்லும் பயணத்தை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட உளவு பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

சீனாவின் இந்த பலூன் மக்கள் வாழும் பகுதிக்கு மேலே பறந்தது. இதனால் அது கடல் பகுதிக்கு செல்லும் வரை அமெரிக்க விமானப்படை காத்து இருந்தது. அதை தொடர்ந்து கடல் பகுதிக்கு சென்றதும் 3 எப் 22 போர் விமானங்கள் அந்த பலூனை சுற்றி பறந்து, பின்னர் சுட்டு வீழ்த்தியது.

இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், அதிபர் ஜோ பைடனின் வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க போர் விமானம் தென் கரோலினா கடற்கரையில் உள்ள நீர் மீது சீன மக்கள் குடியரசால் ஏவப்பட்ட உயரமான கண்காணிப்பு பலூனை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது என தெரிவித்தார்.


சீன உளவு பலூனை அமெரிக்க ரானுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ

https://twitter.com/Amerikaliturk/status/1621961268537053184


2023 Chinese balloon incident

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback