Breaking News

இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் படிமம் கண்டுபிடிப்பு மத்திய சுரங்க அமைச்சகம் அறிவிப்பு Lithium reserves found in Jammu and Kashmir

அட்மின் மீடியா
0

இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் கனிம படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பேட்டரிகள் தயாரிப்பதற்கு மிக முக்கியமான மூலப்பொருள் லித்தியம் கனிமம் ஆகும். குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் முக்கிய மூலப் பொருளாக லித்தியம் பங்கு வகுக்கிறது. சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துவரும் சூழலில் இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்தியா தற்போது தனது லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துவருகிறது.

இந்திய புவியியல் ஆய்வு மையம் 2018-19 ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் புவியியல் ஆய்வை தொடங்கியது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆய்வில் ஜம்மு காஷ்மீரிலும் தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய 10 மாநிலங்களிலும் தங்கம், லித்தியம்,மாலிப்டினம் உள்பட 51 வகை கனிம தொகுதிகளை கண்டறிந்து உள்ளது. 

அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் அளவிலான லித்திய படிமங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் லித்திய படிமங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவில் லித்தியம் இருப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வெளி நாடுகளில் இருந்து லித்தியம் அயன்பேட்டரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மின் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உள் நாட்டில்யே லித்தியம் அயன்பேட்டரி தயாரிப்பை மேற் கொள்ளலாம்.


lithium minerals in india

lithium production in india

lithium reserves in india

Lithium reserves found in Jammu and Kashmir

In a first in country, 5.9 million tonnes Lithium deposits found in J&K

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback