Breaking News

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0

இபிஎஸ் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்ககோரி பன்னீர் செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். 

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில்,  தீர்ப்பு அளிக்கப்ட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது

அதில் பொதுக்குழு செல்லும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் - என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தொடருவார் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் சிறப்பம்சங்கள்:-

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும்.

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி, மனோஜ் நீக்கம் செல்லும். உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்ற விதியை நீக்கியது செல்லும் - உச்ச நீதிமன்றம்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback