Breaking News

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தமிழகம் முழுதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி  ஆர்.எஸ்.எஸ். சார்பில் மனு அளிக்கப்பட்டது ஆனால் காவல்துறை அனுமதி வழங்க வில்லை அதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை காட்டி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு மீண்டும் காவல்துறை அனுமதி மறுத்தது. 

இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது .வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் இருக்கும் உள்ளரங்கு நிகழ்வாக, அணிவகுப்பை நடத்தலாம் என்ற, நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்  

. இதனை விசாரித்த தனி நீதிபதி, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மீண்டும் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதம் முடிவடைந்த நிலையில்  மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்தனர். 

இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தமிழகத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்கு நிகழ்வாக, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை நடத்துமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்ததோடு, அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு மீண்டும் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து போலீஸ் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback