Breaking News

விரைவில் மாதாந்திர மின்கட்டணம் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி admin media

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.கிருஷ்ணம்பாளையம், வைராபாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: மாதாந்திர மின்கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வரும். மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback