Breaking News

குழந்தைகளை 6 வயது முடிந்துதான் 1 ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 6 ஆக உயர்த்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தற்போது, 5 வயது பூர்த்தியான குழந்தைகள், பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.இந்தநிலையில், 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 6 ஆக உயர்த்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு 6 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

அதன்படி 3 வயதில் குழந்தைகளை ப்ரிகேஜியில் சேர்க்கலாம். முதல் வகுப்பில் சேர்க்கும் போது 6 வயது முடிவடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த முறையை கட்டாயமாக கடைப்பிடிக்கும் போது குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படும். அவர்களுக்கான அடிப்படை கற்றலும் அதிகரிக்கும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் உளவியல் மற்றும் மனநல ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அவர்களை மிக இளம்வயதிலேயே பள்ளியில் சேர்க்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback