Breaking News

ஆஞ்சியோகிராபி வேண்டாம் 5000 ரூபாயில் ஹார்ட் பிளாக் சரி செய்யும் நவீன முறை சிகிச்சை என பரவும் வீடியோ உண்மை என்ன New Angiography Method at Just Rs. 5000 in J J Hospital

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இந்த மகிழ்ச்சியான செய்தி மற்றும் வீடியோவை உங்கள் தொடர்பு எண்கள் மற்றும் குழுக்களுக்கு உடனடியாக அனுப்பவும் மாரடைப்பு பற்றி கவலைப்படுவதை இப்போதே நிறுத்துங்கள்.புதிய தொழில்நுட்பத்தைப் பார்க்கவும். ஹார்ட் பிளாக்ஸ் இந்த வகை ஆஞ்சியோகிராபி மூலம் நேரடியாக நீக்கம். இந்த சிகிட்சை மும்பை ஜேஜே மருத்துவமனையில் கிடைக்கிறது..  விலை ₹5000 மட்டுமே.வீடியோவைப் பார்த்து, தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைக்கவும். என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ  இதயத்தில் உள்ள பிளாக்கை சரிச் எய்யப்படும் சிகிட்ச்சை இல்லை என்று அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

ஆஞ்சியோகிராபி  என்றால் என்ன

இதயத்தின் மேலுள்ள குருதிக் குழாய்களில் அடைப்பு ஏதேனும் உள்ளதா எனக்கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முறையாகும் . அதாவது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதைப் பார்க்க பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் இதயத்தின் நிலைமைகளைக் கண்டறிய உதவும்

ஆஞ்சியோகிராம் தொடை அல்லது மணிக்கட்டின் அருகேயுள்ள தமனியின் வாயிலாக செய்யப்படுகிறது. 1.5 மிமீ முதல் 2.௦.மிமீ விட்டமுடைய நுண்ணிய குழாய்கள் மகாதமனியின் உள்ளே செலுத்தப்படுகின்றன. 

இக்குழாய்களின் வழியாக ரேடியோ கான்ட்ராஸ்ட் மருந்து செலுத்தப்படுகின்றது. அச்சமயம் எக்சு கதிர் கொண்டு இதயம் படம் பிடிக்கப்படும். இதன் மூலம் இதய இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏதேனும் இருப்பின் அவை துல்லியமாக அறியப்படுகின்றன.

இதய ஆஞ்சியோகிராம் என்பது இதய தமனிகள் எனப்படும் உங்கள் இதயத்தின் இரத்த நாளங்களைப் பார்க்க எக்ஸ்ரே படங்களைப் பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும். 

சரி விஷயத்திற்க்கு வருவோம் இதய ஆஞ்சியோகிராபி என்பது இதயத்தில் உள்ள இரத்த குழாய்களில் உள்ள அடைப்பை பார்ப்பது ஆகும்

ஆனால் பலரும் ஷேர் செய்யப்படும் வீடியோவில் உள்ள சிகிச்சை முறையில் ஒருவர் வாயில் ஒரு பொருளை முழுங்குகின்றார் அது எப்படி இதயத்திற்க்கு செல்லும் என்று யோசித்தீர்களா


பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ள சிகிச்சை முறை இதயத்திற்க்கான அடைப்பு சிகிச்சை முறை அல்ல அதாவது மாரடைப்பிற்குச் செய்யப்படும் சிகிச்சை அல்ல

அவர் வாயில் முழுங்குவது சைட்டோஸ்பான்ஜ் ஆகும் இந்த மாத்திரை விழுங்கியதும் வயிற்றினுள்சென்று கரைந்து, அதிலுள்ள சைட்டோஸ்பான்ஜ் விரிந்துவிடும். பிறகு அதில் இணைக்கப்பட்டுள்ள நூலின் மறுமுனையை பிடித்து இழுக்கும் போது ஸ்பான்ஜ் உணவு குழாயில் இருந்து செல்கள் அதில் ஒட்டிக்கொள்ளும் அந்த செல்களை கொண்டு உணவு குழாய் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்படுகிறது. 


முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.youtube.com/watch?v=ZPU2NjZkpW8&t=46s


https://refluxuk.com/symptoms-and-diagnosis/diagnostic-tests/cytosponge/

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback