எங்கு பார்த்தாலும் சடலம் , தோண்ட தோண்ட பிணம் துருக்கி பலி எண்ணிக்கை 33,000-ஜக் கடந்தது.! Earthquake ddied in Türkiye
துருக்கி, மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,000-ஜக் கடந்துள்ளது.
துருக்கியில் கடந்த வாரம் ஏற்பட்ட மிகபெரிய நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்களை எல்லாம் தரையோடு தரைமட்டம் ஆக்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானோரை மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். பல சர்வதேச நாடுகளும் தங்களது மீட்புக்குழுவை உதவிக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த இடிபாடுகளில் இன்னும் நிறைய பேர் சிக்கியிருக்கலாம், இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 33,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதிக்கு அருகில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அது ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகியுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்