Breaking News

ஹஜ் பயணிகளுக்கு இனி கொரானா கட்டுப்பாடுகள் இல்லை - சவூதி அரேபிய அரசு அறிவிப்பு Saudi Arabia removes restrictions on Hajj pilgrim

அட்மின் மீடியா
0

 கொரானா காரணமாக பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்த மெக்காவில் இனி ஹஜ் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது என சவுதி அமைச்சர் தவுபிக் அல் ரபையா தெரிவித்துள்ளார்.


கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த அளவிலேயே ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதனால் ஹஜ் பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது.

இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இருந்து ஹஜ் யாத்ரீகர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்காது எனவும் கோவிட் பாதிப்பு நேரத்தில் 65 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலை இப்போது இருக்காது. வழக்கம் போல் பயணிகள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்திய தூதரகம் முஹம்மது ஷாஹித் ஆலம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சவுதி அமைச்சர் டாக்டர் அப்துல்பத்தாஹ் சுலைன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.


Saudi Arabia removes restrictions on Hajj pilgrim

Hajj 2023

hajj 2023 tamil nadu

haj 2023 tamil

Saudi Arabia Lifts Restrictions For Pilgrims

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback